Mar 24, 2010

புது கேலக்ஸி கண்டுபிடிப்பு

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
அமெரிக்க மற்றும் அய்ரோப்பா விஞ்ஞானிகள் சேர்ந்து புதிதாக ஒரு கேலக்ஸியை கண்டுபிடித்துள்ளார்கள், அது நமது மில்கிவேயை விட அதிக தூரத்தில் இருக்கிறதாம். அதாவது 10 பில்லியன் ஒளி வருட தூரம் நமது பூமியில் இருந்து.



இந்த கேலக்ஸி கண்டுபிடித்ததினால், நமது பால்வெளி எப்படி உருவாகியிருக்கலாம் என்று வருங்காலத்தில் ஆராய்ச்சி செய்வதற்கு மிகவும் வசதியாக இருக்கும். மேலும் பெருவெடிப்பு நிகழ்ந்தை பற்றியும் அறிவதற்கு மிகவும் உபயோகமாய் இருக்கும்.

இந்த சூரிய குடும்பத்தில் இருக்கும் பல்வேறு கோள்களை பற்றியே இன்னும் தெரியாத நிலையில், அதாவது சில கோள்களை பற்றியே இப்போதுதான் அறிந்து கொண்டுள்ளனர். புதுவகை கேலக்ஸியினால் என்ன என்ன நன்மைகள் என்பதை பற்றி வருங்காலத்தில் தெரிந்து கொள்ளலாம்.

முக்கியமாக நமது பால்வெளியை வைத்து, அதனின் கோள்களை வைத்து ஜாதகத்தை கணித்து கொண்டிருந்தவர்களுக்கு, புது கேலக்ஸியும் அதனை சார்ந்த கண்டுபிடிப்புகளும் இவர்களின் உண்மை நிலையை தெரியப்படுத்தும்.

வருங்காலத்தில் புது கேலக்ஸியில் ஏதாவது ஆக்ஸிசன் இருக்கும் ஒரு கோளில் மனிதன் பிளாட்டு போட்டு வித்தாலும் விக்கலாம் :)

0 comments :